கோவை; சுந்தராபுரம் காமராஜ் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.