புளியங்குடியில் முஸ்லிம்கள் பூக்குழி இறங்கி நோன்பு திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 11:07
புளியங்குடி: புளியங்குடியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள் நடத்திய பூக்குழி திருவிழா நடந்தது. புளியங்குடியில் உள்ள அசன் உசேன் தர்காவில், மொகரத்தை முன்னிட்டு, கந்துாரி விழா நடந்தது. மாலையில் தர்காவில் இருந்து பச்சை களை ஊர்வலம் நடந்தது. பின்பு கொடியேற்றுதல், சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தப்பட்டது. இரவு 10 மணியளவில் ஏராளமான இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து, அசன் உசேன் நினைவாக தர்கா வளாகத்துக்குள் பூக்குழி இறங்கினர். புளியங்குடியில் சுமார் நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக பூக்குழி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர். மொகரம் பண்டிகையை முன்னிட்டு சியா பிரிவு முஸ்லிம்கள் உடல்களில் கத்தியால் கீறி, கருப்பு உடையணிந்து செல்வார்கள். புளியங்குடியில் முஸ்லிம்கள் நெருப்பை வளர்த்து, அதில் இறங்கி நோன்பு திறந்தனர். திருவிழாவில் கடையநல்லுார், வாசுதேவநல்லுார், சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.