பதிவு செய்த நாள்
08
அக்
2012
12:10
பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் நாராயணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், சேந்தன்குடி பசுபதிகோயில் பரமகல்யாணி சமேத பசுபதீசுவரர் திருக்கோயில் ஆகும். நாராயணி, விஷ்ணு அம்சம் உடையவள். தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவள். சியாமள வர்ணம் உடையவள். மிக்க பலம் பொருந்தியவள். சங்கு, சக்கரம், அபயம், வரதம் அமைந்த நாற்கரத்தினள். கருடக்கொடி, கருடவாகனம் உடையவள்.
மயிலாடுதுறை பூம்பூகார் சாலையில் பசுபதி அக்ரகாரத்திற்கு அண்மையில் உள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அய்யம்பேட்டையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூர ஆட்டோ பயணம் செய்தால் ஜம்புகேஸ்வரர் சமேத அலங்காரவல்லி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைஷ்ணவி வழிபட்ட தலமாகும். வைஷ்ணவியின் தரிசனம் செய்தபோது சிவபெருமான், தனது திருக்கழல் தரிசனத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போது அம்பாள் மடந்தைப் பருவத்திளாய்(18 வயது) காட்சி அளித்துள்ளாள்.
வைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் விஷ்ணு அம்சி ; மகாலட்சுமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.
விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!
நாராயணி பாடல்: பரவுபுண்ணிய நாதனைப் பசுபதீச்சரத்து
விரவும் ஆதியை அடியருக்கெளிய வேதியனைப்
புரவுபூண்டொளிர் வயிணவி பூசனை புரிந்து
கரவுநீர்தரு வரமெலாம் பெற்றுமை களித்தாள்.
நாராயணி (வைஷ்ணவி) - பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:
காயத்ரி: ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஸங்க சக்ர தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம :
அர்ச்சனை: ஓம் வைஷ்ணவியை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் அரவிந்தாயை நம
ஓம் ஆதித்தாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் குமுதாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் கருடத்துஜாயை நம
ஓம் கோவிந்தாயை நம
ஓம் சதுர்ப்புஜாயை நம
ஓம் ஜனார்த்தனாயை நம
ஓம் தாராயை நம
ஓம் தமனாயை நம
ஓம் தாமோதராயை நம
ஓம் தீப்பமூர்த்யை நம
ஓம் நரசிம்யாயை நம
ஓம் பத்மநாயை நம
ஓம் கத்மின்யை நம
ஓம் புரந்தராயை நம
ஓம் புண்டரீவாøக்ஷ நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் மதுசூதனாயை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் மாதவாயை நம
ஓம் முகுந்தாயை நம
ஓம் யக்ஞபதயேயை நம
ஓம் ராமாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் வாமனாயை நம
ஓம் விக்ரமாயை நம
ஓம் விஷ்வக்சேனாயை நம
ஓம் வேதாயை நம
ஓம் வைகுண்டாயை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சிவாயை நம
ஓம் சூபர்காயை நம
ஓம் சர்வேஸ்வராயை நம
ஓம் ஹிரண்யகர்பாயை நம
ஓம் வாசுதேவாயை நம
ஓம் புண்யாயை நம
ஓம் கௌஸ்துபாயை நம
ஓம் மதுராக்ருதயே நம
ஓம் அனந்தாயை நம
ஓம் வனமாலினேயை நம
ஓம் பீதவஸ்ராயை நம
ஓம் பாரிஜாதப்ரியாயை நம
ஓம் கோபாலாயை நம
ஓம் காமஜனகாயை நம
ஓம் த்வாரகர்நாகாயை நம
ஓம் ப்ருந்தாவனாயை நம
ஓம் நரநாராயணாயை நம
ஓம் அஷ்டலட்மியே நம
ஓம் பரமபுருசயை நம
ஓம் கம்சவதாயைசத்ய வாசேயை நம
ஓம் சத்யசங்கல்பாயை நம
ஓம் பரப்ப்ரமன்யை நம
ஓம் தீர்த்தபதாயை நம
ஓம் தயாநிதியை நம
ஓம் மோட்சலக்ஷிமியை நம
ஓம் பயநாசனாயை நம
ஓம் வராயை நம
ஓம் ரகுபுங்கவாயை நம
ஓம் தேஜஸ்வினேயை நம
ஓம் ரூபவதேயை நம
ஓம் கமலகாந்தாயை நம
ஓம் ராஜராஜவரப்ரதாயை நம
ஓம் நிதர்யவைபவாயை நம
ஓம் ரம்ய விக்ரகாயை நம
ஓம் லோகநாகியை நம
ஓம் யக்ஷகர்தர்வவரதாயை நம
ஓம் வரேண்யாயை நம
ஓம் பூர்ணபோதாயை நம
ஓம் சார புஷ்கரிணீதீராயை நம
ஓம் யஜ்ஞ வராகாயை நம
ஓம் ராசீவ லோசனாயை நம
ஓம் மதுசூதனாயை நம
ஓம் அச்யுதாயை நம
ஓம் தேவ பூஜிதாயை நம
ஓம் சக்ரத்ராயை நம
ஓம் சங்குஹஸ்தராயை நம
ஓம் நிர்விகல்பாயை நம
ஓம் நிராதங்காயை நம
ஓம் நிரஞ்ஜனாயை நம
ஓம் சார்ங்கபாணாயை நம
ஓம் ஊருஹஸ்தாயை நம
ஓம் தீன பந்தாயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கரந்தமகுடாயை நம
ஓம் தேவகீயாயை நம
ஓம் அயக்ரீவாயை நம
ஓம் ஜனார்த்தனாயை நம
ஓம் வனமாலின்யை நம
ஓம் அஸ்வரூடாயை நம
ஓம் கஸ்தூரி திலகாயை நம
ஓம் சேசாத்ரி காயை நம
ஓம் பராயை நம
ஓம் அனந்தசிரயாயை நம
ஓம் வாமதேவாயை நம
ஓம் பீஷ்டப்பரதாயியை நம
ஓம் கூர்மமூர்த்தியை நம
ஓம் மத்ய ரூபாயை நம
ஓம் ச்வேதகோலபராயை நம
ஓம் சௌம்ய ரூபாயை நம
ஓம் சேசாயை நம
ஓம் சர்வகாமப்ரதாயை நம
ஓம் சத்வ மூர்த்யை நம
ஓம் கருணாநிதியை நம
ஓம் நாராயணாயை நம
ஸ்ரீ நாராயணி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.
துதி: சங்க சக்ர கதா சார்ங்க
க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே
நாராயணீ நமோஸ்துதே.