Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகேஸ்வரி நாராயணி என்ற வைஷ்ணவி நாராயணி என்ற வைஷ்ணவி
முதல் பக்கம் » சப்தகன்னியர்
கவுமாரி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 அக்
2012
12:10

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும். இத்தலத்தில் கல்யாண சுந்தரி, பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம். மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.

கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.

மயிலாடுதுறையிலிருந்து  4 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கவுமாரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள். ஒரு முகமும் இரண்டு கண்களும்- நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரண்டு கரங்களை வரத அபயமாகவும்; மேல் இரண்டு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தாங்கி இருப்பாள். நீல நிற மேனியினை உடையவள். யௌவன வயதினள். மயில் வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவள். கோழிக்கொடி பிடித்திருப்பவள். இரதியினை ஒத்த அழகு மேனியள். தேவர்களின் சேனாதிபதியாகிய சுப்ரமணியரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவள் இவளே. இவளை வணங்கினாள் நல்ல மகவு கிட்டும். உபாசித்தால் - வீரத்தினை அடையலாம். கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும இவள் ஏவலுக்குப் காத்திருப்பர். எனவே, இவளைத் தொழுது பெரும் பதவியடையலாம்!

கவுமாரி பாடல்:

ஆறு சூடியை அற்புதக் கூத்தனை அவிர்கஞ்
சாறு மேவிய சங்கரன்றனைக் கவுமாரி
ஊறும் அன்பினில் ஒளிகெழு பூசனை ஏற்றி
ஏறுபற்பல வளங்களும் இன்புறப் பெற்றாள்.

கவுமாரி ஸ்கந்தரி - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:

ஓம் - ஹ்ரீம் - கௌமாரி - ஆசனாயயாய - நம :
ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:

காயத்ரி:

ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:

அர்ச்சனை: ஓம் கௌமாரியை நம
ஓம் ஸ்கந்தாயை நம
ஓம் குஹாயை நம
ஓம் சண்முகாயை நம
ஓம் க்ருத்திகாயை நம
ஓம் சிகிவாகனாயை நம
ஓம் குமாராயை நம
ஓம் சேனாயை நம
ஓம் விசாகாயை நம
ஓம் கமலாசனாயை நம

ஓம் ஏகவர்ணாயை நம
ஓம் அக்னிகர்பாயை நம
ஓம் சந்த்ரவர்ணாயை நம
ஓம் கைவல்யாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் சுப்ரமண்யை நம
ஓம் தேவ சேனாயை நம
ஓம் சமாயை நம
ஓம் சங்ககண்டாயை நம
ஓம் ரக்ஷிகர்த்தாயை நம

ஓம் ரதி அம்சாயை நம
ஓம் ரம்ய முகாயை நம
ஓம் ரகு பூஜிதாயை நம
ஓம் வசூதாயை நம
ஓம் வடுரூபாயை நம
ஓம் வனஜாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் பத்ர மூர்த்யை நம
ஓம் பயாபகாயை நம
ஓம் பக்த நிதாயை நம

ஓம் வஸ்ரஹஸ்தாயை நம
ஓம் சூராயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் அநகாயை நம
ஓம் நிர்மலாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் நிர்விகராயை நம
ஓம் சத்ய வாசாயை நம
ஓம் சத்ய சந்தாயை நம

ஓம் கருணாலாயை நம
ஓம் திருலோகபதயை நம
ஓம் புஷ்டிகராயை நம
ஓம் சிரேஷ்டாயை நம
ஓம் சரண்யாயை நம
ஓம் சர்க்காயை நம
ஓம் தர்மரதாயை நம
ஓம் தக்ஷõயை நம
ஓம் பரப்ரமண்யை நம
ஓம் சௌக்கியநிலாயை நம

ஓம் பரஞ்சோதியை நம
ஓம் கிருபாநிதயை நம
ஓம் அப்ரமேயாயை நம
ஓம் ஜிதேந்திர்யாயை நம
ஓம் அக்னிகர்பாயை நம
ஓம் தேவாயை நம
ஓம் சடாநநாயை நம
ஓம் குக சகாயை நம
ஓம் லோக ரக்ஷகாயை நம
ஓம் சிந்தாயை நம

ஓம் சித்ரகாரகாயை நம
ஓம் கட்கிதராயை நம
ஓம் தநுர்தராயை நம
ஓம் ஞானகம்யாயை நம
ஓம் சர்வபூததயாயை நம
ஓம் விச்வப்பிரியாயை நம
ஓம் விச்வபுசேயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கல்ப்ப வ்ருசாயை நம
ஓம் துக்கக்னாயை நம

ஓம் வரப்பிரியாயை நம
ஓம் ஞான ரூபாயை நம
ஓம் ஞான தாத்ரே நம
ஓம் வேத ஆத்மநேயை நம
ஓம் மகா ரூபாயை நம
ஓம் பகூதராயை நம
ஓம் நிர்விகல்பாயை நம
ஓம் நிர்வ பாசாயை நம
ஓம் சிந்தையாயை நம
ஓம் சிந்மயாயை நம

ஓம் ஜீவ சாக்ஷினேயை நம
ஓம் கர்மசாக்ஷினேயை நம
ஓம் அத்வயாயை நம
ஓம் அஜய்யாயை நம
ஓம் மிதா சநாயை நம
ஓம் சுலோசனாயை நம
ஓம் அவ்யக்தாயை நம
ஓம் முக்தி ரூபாயை நம
ஓம் பராத்பரதாயை நம
ஓம் அநந்யாயை நம

ஓம் அதநவேயை நம
ஓம் அச்சேத்யாயை நம
ஓம் அசோத்யாயை நம
ஓம் நாரதமுநிதோத்ராயை நம
ஓம் விகட்டநாயை நம
ஓம் சாம்ராஜ்யபதாயை நம
ஓம் யுகாந்தகாயை நம
ஓம் அபிமராயை நம
ஓம் ஆசவேயை நம
ஓம் அம்ருதாயை நம

ஓம் காருண்யநித்யை நம
ஓம் பீஜாயை நம
ஓம் சாச்வதாயை நம
ஓம் தேவதேயை நம
ஓம் பாரிசாதாயை நம
ஓம் யோகாயை நம
ஓம் சர்வாபரணபூசிதாயை நம
ஓம் ஸ்கந்தர்யை நம

ஸ்ரீ கவுமாரி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: மயூர குக்குட வ்ருதே
பஹாசக்தி தரேனகே
கௌமாரி ரூபஸம்ஸ்தானே
அம்பிகே நமோஸ்துதே.

 
மேலும் சப்தகன்னியர் »
temple news

பிராம்மி அக்டோபர் 08,2012

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்
 
temple news

மாகேஸ்வரி அக்டோபர் 08,2012

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்
 
temple news
பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்
 
temple news

வராகி அக்டோபர் 08,2012

வராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்
 
temple news

இந்திராணி அக்டோபர் 08,2012

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar