ஒரே கல்லிலான 21 டன் விமானம் திருப்பூர் கோவிலில் அமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2023 08:08
அனுப்பர்பாளையம்:திருப்பூர் கோவிலில், ஒரே கல்லால் ஆன 21 டன் எடையுள்ள விமானம், ராட்சத கிரேன் வாயிலாக, கோபுரத்தில் பொருத்தப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, முதல் வார்டு, செட்டிபாளையத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில், மாகாளியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. திருச்செங்கோட்டில் இருந்து பிரமாண்ட கல் கொண்டு வரப்பட்டு, ஸ்தபதி கணேஷ் பெருமாள் தலைமையில் ஆறு பேர் கொண்ட சிற்பிகள், கோபுரத்திற்கான விமானம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓராண்டாக நடந்து வந்த இப்பணி, கடந்த வாரம் நிறைவு பெற்றது. 21 டன் எடையுள்ள விமான கோபுரத்தை பொருத்துவதற்கான சிறப்பு பூஜை நேற்று நடந்தது. பின், ராட்சத கிரேன் மூலம் விமான கோபுரம் பொருத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.