வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செமினிபட்டியில் ஆதி வடிவுடையாள் சமேத ஆதிஸ்வரன், அக்னி கருப்பசாமி கோயில் ஆடி மாத திருவிழா 3 நாட்கள் நடந்தது. அழகர்கோயிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. கச்சைகட்டி நீலமேக பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து கிராம காவல் தெய்வ வழிபாடு நடந்தது. சந்தன கணபதி, ஜடா முனீஸ்வரர், லட்சுமி, வராகி அம்மன், பால நாகம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளை தலைமை பூஜாரி ஆதி முத்துக்குமார் செய்தார். கிடா வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.