ஆடிக்கிருத்திகையன்று கந்தபுராணம் படியுங்க.. எல்லா நன்மைகளும் உண்டாகும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2023 06:08
முருகப்பெருமானின் வரலாற்றை தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் என்னும் நுõலாக இயற்றியுள்ளார். சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து, ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக்கண்களில் இருந்து நெருப்புப்பொறியை சிந் தினார். அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறுதாமரை மலர்களில் ஆறுகுழந்தைகள் உருவாயின. அக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சிவன் கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார். பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள். அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், “நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திரமாக நிலைத்து வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இனி உலகில் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார். முருகனின் வரலாற்றை கூறும் கந்தபுராணத்தை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.