வடலூர்: குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது. குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா 3ம் தேதி, வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, அம்மன் வீதி உலா நடந்தது. முக்கிய திருவிழாவான நேற்று நடந்த செடல்திருவிழாவில், பக்தர்கள் உடலில் ஊசி குத்திக்கொண்டு அம்மனை வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று தேர் திருவிழா நடைபெறுகிறது.