Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளங்கருப்பனசாமி கோவிலில் படையில் ... திருப்பதி முன்பதிவிற்கு தேதி அறிவிப்பு; நேற்று மட்டும் ரூ.4.60 கோடி காணிக்கை திருப்பதி முன்பதிவிற்கு தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை எங்கும் சரணகோஷம்; ஆவணி 1ல் ஐயப்பனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சபரிமலை எங்கும் சரணகோஷம்; ஆவணி 1ல் ஐயப்பனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 ஆக
2023
10:08

சபரிமலை : மலையாள ஆண்டுபிறப்பான ஆவணி 1ல் ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது.

கேரளாவில் மலையாள ஆண்டு ஆவணி மாதம் பிறக்கிறது. அதன்படி ஆவணி பிறந்ததையொட்டி இம்மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டபோது ஐயப்பனை தரிசிப்பதற்கான கூட்டம் சரங்குத்தி அருகே வரை நீண்டு இருந்தது. நடை பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றிய பின்னர் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தது. ஆக.21 வரை பூஜைகள் நடைபெறுகிறது. அனைத்து நாட்களிலும் காலை உஷபூஜை, மதியம் உச்ச பூஜை களபாபிஷேகம், கலசாபிஷேகம் ,மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு அத்தாழ பூஜை ஆகியவற்றுடன் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜை, இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடக்கிறது. பூஜைகள் நிறைவு பெற்ற பின்னர் ஆக. 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் திருவோண பூஜைகளுக்காக ஆக.26 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இந்நிலையில் பம்பை திருவேணி சந்திப்பில் புலி மேல் அமர்ந்திருக்கும் ஐயப்பன் சிலையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நேற்று திறந்து வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.காரமடையில் ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் - சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பூர், அவிநாசி அடுத்த சேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெய்வானை யானை தாக்கியதில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar