காட்டுமன்னார்கோயில்: நெய்வாசல் அருள்மிகு மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் காட்டுமன்னார்கோயில் அடுத்த நெய்வாசல் ஊராட்சிக்குட்பட்ட கலிகடந்தான் கிராமத்தில் உள்ள பிரிசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொறு ஆண்டுகள் தீ மதி உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு, 38 ஆம் ஆண்டு தீமிதி மகோற்சவம் கடந்த 18 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. வரும் 27 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் முக்கிய விழாவான தீ மதி உற்வசவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கிராமத்து முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.