மேலூர்: மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழாவிற்கு மேலூர், திருவாதவூரில் இருந்து மாணிக்க வாசகர் இன்று(ஆக.25) புறப்படுகிறார். ஆக.26 ல் நரியை பரியாக்கும் திருவிளையாடல், ஆக.27 ல் பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆக.28 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியுடனும், ஆக.29 மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் சேர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆக.30 ல் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் இருந்து விடைபெறும் மாணிக்கவாசகர் செப்.3 வரை மண்டகபடிகளில் தங்கி அருள்பாலிக்கிறார். செப்.4ல் திருவாதவூர் கோயிலை வந்தடைகிறார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத்துரை, செயல் அலுவலர் கிருஷ்ணன், உதவி ஆணையர் யக்ஞ நாராயணன், பேஷ்கார் பகவதி செய்துள்ளனர்.