சனாதன தர்ம பிரசாரம் திருப்பதியில் துவக்கம்; கோவிந்தா கோடி எழுதி வரும் குடும்பத்தினருக்கு விஐபி பிரேக் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2023 06:09
திருப்பதி: சனாதன தர்மம் குறித்த பிரசாரம் தீவிர படுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தேவஸ்தான அறங்காவலர்கள் தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது: சனாதன தர்மம் குறித்த பிரசாரம் தீவிர படுத்தப்படும். இளைஞர்கள் மத்தியில் பக்தியை பரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேண்டும்...இளைஞர்களிடையே பக்தியை பரப்பும் நிகழ்ச்சிகளை ஸ்ரீவாரி கோவிலில் இருந்து தொடங்குகிறது. ஒரு கோடி முறை "கோவிந்தா" என ராம கோடி முறையில் எழுதிவரும் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விஐபி பிரேக் தரிசனம் ஏற்பாடு செய்யப்படும். 10லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமங்கள் எழுதியவர்களுக்கு அவர்களுக்கு மட்டும் விஐபி பிரேக் தரிசனம் ஏற்பாடு செய்யப்படும். எல்கேஜி முதல் பிஜி வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடிக்கணக்கான பகவத் கீதை சுருக்கம் புத்தகங்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2 கோடி செலவில் சந்திரகிரி மூலஸ்தான கோவில் புனரமைப்பு, மும்பை பாந்த்ராவில் 5.35 கோடியில் தகவல் மையம், ஊழியர் குடியிருப்புகளை சீரமைக்க 49.5 கோடி ஒதுக்கீடு, திருப்பதியில் உள்ள பழைய 2, 3 சத்திரங்களுக்கு பதிலாக, 600 கோடி ரூபாய் செலவில், அச்யுதம், ஸ்ரீபாதம் குடியிருப்பு வளாகங்கள் கட்டப்படும். என முடிவு செய்யப்பட்டுள்ளது. என கூறினார்.