10,008 ருத்ராட்சங்களால் ஆன ருத்ர நடராஜ விநாயகர் சிலை: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2023 04:09
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கர்ணன்கொல்லை பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய மாவுகளைக் கொண்டு ருத்ர நடராஜ விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது. காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஐந்து முகம் கொண்ட 10 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு 10 அடி உயரத்தில் ருத்ர நடராஜ விநாயகர் சிலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு, ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் உடுக்கையுடன் நின்ற கோலத்தில் நடராஜர் ரூபத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விழாவில், தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மேலும், விநாயகர் விசர்ஜனம் செய்யப்படும்போது ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன் தெரிவித்து உள்ளார்.