அவிநாசி வில்வ விநாயகர் கோவில் ஆண்டு விழா; தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2023 10:09
அவிநாசி: அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள வள்ளுவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வில்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் எட்டாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி ஆண்டு விழாவை முன்னிட்டு வள்ளுவர் வீதி பொதுமக்கள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.