பதிவு செய்த நாள்
19
செப்
2023
10:09
பழநி: பழநி நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பழநி கோயில் ஆனந்தவிநாயகர் கோயிலில் புரட்டாசி மாத பிறப்பு, விநாயகர் சதுர்த்தி விழா, ஆனந்த விநாயகர் கோயில் வருட அபிஷேக விழா, ஆகியவை நடந்தது. இதில் கலச புனித நீரை யாகத்தில் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. ஆனந்த விநாயகருக்கு ஹோமத்தில் வைத்த கலச நீரில் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பழநி, திருஆவினன்குடி கோயிலில் விநாயகர், காந்தி ரோடு பட்டத்து விநாயகர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் பிரசன்ன விநாயகர் கோயில், காரமடை வன்னி விநாயகர் கோயில், ரயில்வே காலனி ஆதி விநாயகர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். மேலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது.