கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 120 அடி உயர ராஜகோபுரம்; வரைபடம் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2023 10:09
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 120 அடி உயர ராஜகோபுரம் அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் மீண்டும் கட்டும் பணியை துவங்குவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக்கொள்ளலாம். முன்னதாக சக்தி பீட பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு சித்திரை மாதம் ராஜகோபுரம் கட்டும் பணியை துவங்கலாம் என்று தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதையடுத்து தொல்லியல் துறை ஆலோசகர் மணி தலைமையில் அதிகாரிகள் ராஜகோபுரம் கட்டப்பட உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் மாதிரிவரை படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும் 66அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது. இதன் மாதிரி வரை படத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழுதலை வரிடம் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக ராஜகோபுரம் கட்டும் பணி நல்ல முறையில் நடை பெற வேண்டி கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் இன்று காலை கணபதி ஹோமம் நடக்கிறது.