சூடிகொடுத்த சுடர்கொடியாம் ஆண்டாள் மாலை திருப்பதி வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2023 11:09
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, சூடிகொடுத்த சுடர்கொடியாம் ஆண்டாள் மாலை ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து கொண்டு வரப்பட்டது.
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலைகள், கருடசேவையில் சுவாமியை அலங்கரிப்பதற்காக நேற்று திருமலைக்கு வந்தடைந்தது. முதலில் திருமலை ஆஞ்சநேயசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள பெரியஜீயர் மடத்துக்கு மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு திருமலை ஜீயர்கள் தலைமையில், மாலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கிருந்து செயல் அதிகாரி தர்ம ரெட்டி, தமிழக அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் செயல் அதிகாரி முத்துராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் ஆண்டாள் நாச்சியாரின் மாலைகளை ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.