பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2023 11:09
விக்கிரமசிங்கபுரம் அய்யனார்குளத்தில் பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த17ம் தேதி இரவு 8 மணிக்கு அய்யாபதியிலிருந்து கொடி அழைப்பு நடந்தது. 18ம் தேதி காலை சிறப்பு பூஜையும் இரவு 7 மணிக்கு அன்னதானம், தொடர்ந்து சிவச்சந்திரன் அய்யாவழி ஆன்மிக வழிபாடு, 19ம் தேதி காலை 11 மணிக்கு காலன் பூஜை, மதியம் 1 மணிக்கு பூக்குழியில் அக்கினி ஏற்றுதல் நடந்தது. இரவு 09:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நள்ளிரவு 12 மணிக்கு சாம பூஜை நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை, படைப்பு எடுத்தல் நிகழ்ச்சி, காலை 7 மணிக்கு அன்னதர்மம் நடந்தது. கடந்த17ம் தேதி முதல்20ம் தேதி வரைஅய்யாநாக வாகனத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.