பதிவு செய்த நாள்
29
செப்
2023
12:09
கன்னியாகுமரி; புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்தது. குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் நேற்று மகா சமுத்திர ஆரத்தியின் 3வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விவேகானந்த கேந்திரத்தில் இருந்து முக்கடல் சங்கமம் வரை சாதுக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஊர்வலம் வந்தனர். இரவில் சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன. திருத்தொண்டர் பேர வைத்தலைவர் ராஜகோ பாலன் தலைமை வகித்தார். செயலர் சந்திரன், பொருளாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி முன்னிலை வகித்தனர். இரவு 7.15 மணிக்கு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை, அபிஷேகம் நடந்தது. 7.30 மணிக்கு சுமங்கலிப் பெண்கள் அகல்விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினர். தொடர்ந்து மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்தது. இதில் பா.ஜ., முன்னணி தலைவர் ஹெச்.ராஜா, எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஆதீனங்கள் மகாலிங்க பண்டார சன்னதி சுவாமிகள், திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரசுவாமிகள், புத்தாத்மாநந்த சரஸ்வதி சுவாமிகள், மாவட்ட பா.ஜ., தலைவர் தர்ம ராஜ், நிர்வாகிகள் முத்து ராமன், சி.எஸ்.சுபாஷ், முருகேஷ், ராஜன், பா.ஜ., தலைவர் தர்ம ராஜ், நிர்வாகிகள் முத்து ராமன், சி.எஸ்.சுபாஷ், இந்து முன்னணி அசோகன் பங்கேற்றனர்.