காஞ்சி மடத்திற்கு தன் பூர்வீக வீட்டை தானமாக வழங்கினார் முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2023 11:09
காஞ்சிபுரம்: முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, தன் பூர்வீக வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்கு தானம் வழங்கினார். வீட்டின் சாவி, பத்திரங்களை, சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைத்தார்.
காசியிலுள்ள சங்கர மடத்தில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி முதல் இம்மாதம் 29ம் தேதி வரை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுா்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறாா். இன்று 29ம் தேதி சாதுா்மாஸ்ய விரதம் விஸ்வரூப யாத்திரையுடன் நிறைவு பெறுகிறது. இங்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி மதுரை மாவட்டம் முள்ளிப்பாளையம் கிராமத்தில் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள தன் பூர்வீக வீட்டை காசியில் காஞ்சி காமகோடி பீடாதிபதியிடம் சமா்ப்பணம் செய்துள்ளாா். வீட்டின் சாவி, பத்திரங்களை, சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைத்தார். காஞ்சி சங்கர மடம் நற்காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள சமா்ப்பணம் செய்திருப்பதாக மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.