புதுச்சேரி: நெல்லித்தோப்பு புட்லாய் அம்மன் கோவில் திருப்பணிக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த குயவர்பாளையம் வார்டு கருணாகரப்பிள்ளை வீதியில் புதிதாக புட்லாய் அம்மன் கோவில் கட்டுமானப் பணிக்காக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., பங்கேற்று, தனது சொந்த பணத்திலிருந்து, 50 ஆயிரம் ரூபா# வழங்கினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.