வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2012 11:10
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. வேணுகோபால சுவாமி பாமா, ருக்மணி சமேதராய் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். வேணுகோபால சுவாமி பக்த ஜன சபா சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.