கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவ விழா அக். 15 முதல் அக். 24 வரை நடக்கிறது. கோயில் விசாக கொறடு மண்டபத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள் பாலிப்பார். அக். 15ல் ராஜராஜேஸ்வரி, அக். 16ல் நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், அக். 17ல் ஊஞ்சல், அக். 18ல் பட்டாபிஷேகம், அக். 19ல் திருக்கல்யாணம், அக். 20ல் தபசுக் காட்சி, அக். 21ல் மகிஷாசுரவர்த்தினி, அக். 22ல் சிவபூஜை, அக். 23ல் சரஸ்வதி பூஜை, அக். 24ல் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும்.