பதிவு செய்த நாள்
15
அக்
2012
11:10
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே ரெட்டிபட்டியில், கிருஷ்ணபெருமாள் கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.கொங்கணாபுரம் அருகே ரெட்டிபட்டியில், கிருஷ்ணபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், புரட்டாசி மாத உற்சவம், கடந்த வாரம் ,கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு வாரமாக, ரெட்டிபட்டி, நாச்சூர், குரும்பப்பட்டி, காவடிகாரனூர், வெண்டனூர், மாலக்கட்டி வலவு உள்ளிட்ட பகுதிகளில், எருது உற்சவம் நடந்தது.நேற்று அதிகாலை, தேரோட்டம் நடந்தது. ரெட்டிபட்டி ஊர் முழுவதும் சுற்றிய தேர், காவடிகாரனூரிலிருந்து வந்த எருது, குதிரை ஆகியவைகளுடன், கிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு நேற்று காலை திரும்பியது.தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.