அன்னை ஆதிபரா சக்தியையே சரஸ்வதி, லட்சுமி, பார்வதியாக மூன்றாக பிரித்து, மூன்றுநாள் வீதம் ஒன்பது நாட்கள் நவராத்திரியை ஒட்டி வணங்குகிறோம். ஆனால், தினம்தோறும் மூன்று விதமான ஆடைகள் அணிந்து சரஸ்வதி, லட்சுமி, துர்க்கா தேவியாக காட்சி தருகிறாள் சோட்டாணிக்கரை பகவதி அம்மன். கேரளமாநிலம், எர்ணாகுளம் அருகில் இக்காயில் உள்ளது.