பதிவு செய்த நாள்
21
அக்
2023
06:10
திருப்புத்தூர்: திருப்புத்தூர் கோயில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் அம்பு எய்தல் நிகழ்வு அக்.,24 மாலையில் நடைபெறும்.
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், பூமாயி அம்மன் கோயில், நின்ற நாராயணப் பெருமாள் கோயில்களில் கடந்த அக்.15 ல் நவராத்திரி விழா துவங்கியது. தினசரி அம்மன்,மகாலெட்சுமி கொலு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்கள் பார்வைக்கு அலங்கரிக்கப்பட்டுள்ள கொலுக்கள் உள்ளன. நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் தினசரி காலை 10:00 மணிக்கு மகாலெட்சுமிக்கு மூலவர் திருமஞ்சனமும், உற்ஸவ அம்பாளுக்கு இரவு 7:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. திருத்தளிநாதர் கோயிலில் கொலுவில் சிவகாமி அம்மன், ராஜ அலங்காரம்,மீனாட்சி அம்மன், தபஸ்,சிவபூஜை, காமாட்சி அம்மன் அலங்காரங்கள் நடைபெற்றுள்ளன. அக்.20 ல் அம்மன் சன்னதியில் திருவிளக்குபூஜை நடந்தது. இன்று மகிஷாசூரமர்த்தினி, நாளை சரஸ்வதி அலங்காரத்தில் சிவகாமி அம்மன் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அக்.24 ல் மாலை 5:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். பின்னர் தேரோடும் வீதியில் எழுந்தருளி அம்பு எய்தி அம்பாள் சூரனை வதம் செய்வார். பூமாயி அம்மன் கோயிலில் தினசரி மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. பூமாயி அம்மன் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி,அன்னபூரணி,தையல்நாயகி,ஊஞ்சல், தட்சணாமூர்த்தி, சமயபுரம்மாரியம்மன்,பள்ளிகொண்டபெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அக்.,17 ல் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தி அம்மனை வேண்டினர். இன்று மகிஷாசூரமர்த்தினி, நாளை சிவபூஜை அலங்காரத்திலும் அம்மன் கொலுவில் அருள்பாலிக்கிறார். அக்.24 ல் மாலை 7:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நடைபெறும்.