திருவொற்றியூர், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில், புரட்டாசி நவராத்திரி திருவிழா, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவ அம்மன், பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வருகிறார். அதன்படி, இன்று தாயார் உமா மகேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.