ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.34 கோடி உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2023 06:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1.34 கோடி வருவாயாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பிறகு அக்.,26ல் சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் காணிக்கைகளை ஊழியர்கள் சேகரித்தனர். இதனை கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் உதவி ஆணையர் பாஸ்கரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, ஊழியர்கள் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ. 1 கோடி 34 லட்சத்து 8 ஆயிரத்து 864 ரூபாயும், தங்கம் 91 கிராம், வெள்ளி 3 கிலோ 350 கிராம் காணிக்கையாக கிடைத்தது.