அக்.,28ல் சந்திர கிரகணம் : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2023 05:10
ராமேஸ்வரம்: அக்.,28ல் சந்திர கிரகணம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தப்பட உள்ளது. அக்., 28ல் அதிகாலை1:05 மணி முதல் 2:23 மணி வரை சந்திர கிரகணம் நடக்கவுள்ளது. இதனை யொட்டி ராமேஸ்வரம் திருக்கோயிலில் அன்னாபிஷேகம், சாயரட்ச பூஜை நடைபெறும். அன்றிரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். பின் அதிகாலை 12 :50 மணிக்கு மேல் தீர்த்த வாரி சுவாமி புறப்பாடாகி அதிகாலை 1:44 மணிக்கு அக்னி தீர்த்த கரையில் தீர்த்தவாரி நடக்கும். இதன் பின் தீர்த்தவாரி சுவாமி வீதி உலா நடக்கும். பின் அதிகாலை 3 :30 மணிக்கு கோயில் நடை திறந்து, கிரகண அபிஷேகம் நடக்கும். இதனைதொடர்ந்து அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை, ஸ்படிக லிங்கம் பூஜை மற்றும் திருவனந்தால் பூஜை காலங்கள் நடக்கும். அன்றிரவு 10 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். அக்.,29 காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.