சந்திர கிரகணம் நடக்கும் சரியான நேரம் என்ன?; யாரேல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2023 10:10
ஐப்பசி மாத பவுர்ணமியான அக்.29 சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ஞாயிறு (அக்.29) அதிகாலை 1:05 மணிக்கு துவங்கி 2:23 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் சந்திரனை பார்க்க கூடாது. இன்று (அக்.28) 7:00 மணிக்கு முன்பாக உண்பது நல்லது. சனிக்கிழமை பிறந்தவர்கள், அசுவினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும். பரிகார ராசியினர் கட்டாயம் (அக்.29) காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும்.