திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சூரிய கிரகண காலங்களில் கிரகணத்திற்கு முன்னதாகவும், சந்திர கிரகண காலங்களில் கிரகணம் முடிந்த பின்னரும், கோவிலில் உள்ள, நான்காம் பிரகாரத்தில், பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். சந்திர கிரகணம் , நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:05 மணிக்கு தொடங்கி, 2:24 மணிக்கு முடிந்தது. இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை , 2:30 மணி அளவில், பிரம்ம தீர்த்த குளத்தில், சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.