திருப்புத்தூரில் கந்தசஷ்டி விழா நவ.13 ல் துவக்கம்; நவ.18ல் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2023 05:10
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 45ம் ஆண்டு கந்தசஷ்டி விழா நவ.13 ல் துவங்குகிறது. நவ.18 ல் சூரசம்ஹாரம் நடைபெறும்.
இக்கோயிலில் குன்றக்குடி தேவஸ்தானம் மற்றும் திருமுருகன் திருப்பேரவையினர் கடந்த 44 ஆண்டுகளாக கந்த சஷ்டி விழா நடத்தி வருகின்றனர். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு விழா நவ. 13 ல் துவங்குகிறது. தினசரி மாலை 5:50 மணிக்கு முருகனுக்கு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் நின்ற கோலத்தில் சுப்பிரமணயர் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிப்பார். நவ.18 ல் காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனைகள் நடைபெறும். நவ.18 ல் மாலை 4:30 மணிக்கு உற்ஸவர் முருகன் புறப்பாடாகி, தேரோடும் வீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும். நவ.19ல் காலை 10:00 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டினை பேரவை தலைவர் ரா.கலைமணி, செயலாளர் எம்.சுப்பையா, பொருளாளர் வ.கைலாசம் செய்கின்றனர்.