பதிவு செய்த நாள்
01
நவ
2023
05:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி மண்டபம் புதுப்பிக்கும் திருப்பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் ஒன்று. அந்தகாசூரனை வதம் செய்த ஸ்தலம். பாடல் பெற்ற இக்கோவில் திருப்பணியை இந்து சமய அறநிலைத்துறை மேற்கொண்டுள்ளது. விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில், திருப்பணி விடுபட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் தீர்த்தவாரி மண்டபம் பழுது பார்த்து, புதுப்பிக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். தி.மு.க., அவை தலைவர் குணா, அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர், உறுப்பினர்கள் முன்னிலையில் திருப்பணி கொடையாளர் கல்யாண்குமார் திருப்பணி பொறுப்பை ஏற்றுக் கொள்ள, சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் திருப்பணி துவக்க பூஜையை முன்னின்று நடத்தினார்.