இன்று ஐப்பசி சோமவாரம்; சிவனுக்கு வில்வமாலை சாத்தி வழிபட வேண்டியது கிடைக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2023 10:11
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி, சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். அந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது. 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட்டால் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும். சோமவார விரதம் வருடம் முழுவதும் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. நோய்நொடிகளில் இருந்து விடுபடவும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.