அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணி தீவிரம்; டிச.,31க்குள் நிறைவடையும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2023 01:11
அயோத்தி; அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி டிச.,31க்குள் நிறைவு பெற்று விடும் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை அமைகின்றன. மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி. கோயிலில் 12 நுழைவாயில்கள் இருக்கும். வரும் ஜனவரி 22ம் தேதி இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் கட்டுமானப்பணிகள் டிச.,31க்குள் நிறைவு பெற்று விடும் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இரவு பகலாக பணி நடைபெற்று வருகிறது.