பதிவு செய்த நாள்
09
நவ
2023
05:11
பெங்களூரு: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோவில்களிலும், நவம்பர் 14ல் கோபூஜை செய்யும்படி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அறநிலையத்துறை வெளியிட்ட சுற்றறிக்கை: தீபாவளியின் பலி பாட்டமி நாள், நவம்பர் 14ல் வருகிறது. அன்றைய தினம், ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட, அனைத்து கோவில்களிலும், கோ பூஜை செய்ய வேண்டும். கோபூஜை செய்வது குறித்து, பக்தர்கள் தெரிந்து கொள்ள, கோவிலின் தகவல் போர்டில் அறிவிக்க வேண்டும். அன்றைய தினம், பசுக்களை குளிப்பாட்டி கோவிலுக்கு அழைத்து வரவேண்டும். மஞ்சள், குங்குமம், பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அரிசி, வெல்லம், வாழைப்பழம் இனிப்புகளை சாப்பிட வைக்க வேண்டும். மாலை 5:30 மணி முதல், 6:30 மணி வரை கோதுாலி லக்னத்தில்,
கோபூஜை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.