அயோத்தி ராமர் கோயிலை சுற்றி 21 லட்சம் தீபங்கள்; பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2023 03:11
லக்னோ: தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலை சுற்றிலும் 21 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற மாநில உ . பி., அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஜரூராக துவங்கி நடந்து வருகிறது.
ஆண்டுதோறும் அயோத்தியில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டில் அயோத்தியில் 15 .76 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டில் 21 லட்சம் தீபங்கள் ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் மற்றும் இதனை சுற்றி உள்ள கோயில்கள், மடங்கள் என மின்னொளியில் ஜொலிக்கும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். இந்நேரத்தில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவது தொடர்பாக அதிகாரிகளிடம், கோயில் ஊழியர்களிடம் விசாரித்தார். சிறப்பாக செய்து முடிக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.