கூடலுாரில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2023 04:11
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலர் கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
கூடலுார் கூடல் சுந்தர வேலவர் கோயிலில் 26 ம் ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது. முதல் நாளில் சுந்தரவேலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்காரம், தீபாராதனைக்குப் பின் மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்னை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். அபிஷேகப் பால், பிரசாதம் வழங்கப்பட்டது.