பதிவு செய்த நாள்
13
நவ
2023
04:11
நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். முதல் நாளான இன்று கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. முருகப்பெருமானுக்கும் கொடி மரத்திற்கும் பால், பன்னீர், தயிர், மஞ்சள், நெய், சந்தனம் உள்ளிட்ட பதினாறு வகை அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திண்டுக்கல், நத்தம், செந்துறை, சாணார்பட்டி, கோபால்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். நவ.14 முருகபெருமான் சிவபூஜை திருக்காட்சி, நவ.15 முருகப்பெருமான் சிவ உபதேச திருக்காட்சி, நவ.16 அருணகிரியாருக்கு நடன திருக்காட்சியும் நடக்கிறது. நவ.17 முருகப்பெருமான் வேல் வாங்கும் திருக்காட்சி நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.18ந்தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொள்வார்கள். மறுநாள் நவ.19 தேதி காலை 10.30 மணியளவில் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், செயல் அலுவலர் பால சரவணன் மற்றும் கந்தசஷ்டி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.