பதிவு செய்த நாள்
18
நவ
2023
05:11
போடி; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அம்மனிடம் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையிலும், செயல் அலுவலர் ஹரிஷ்குமார் முன்னிலையும் நடந்து வருகிறது. தினந்தோறும் வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது. சஷ்டி விரதத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்கள் காலை, மாலையில் கந்த சஷ்டி பஜனை பாடல்களை பாடி வருகின்றனர். 6 வது நாளான இன்று சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகளுடன் அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ந்தது. மாலை 4 மணியளவில் முருகன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. காமராஜ் பஜார், தேரடி தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதியில் சுவாமி நகர் வலம் புரிந்தார். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சமேத சுப்ரமணியரின் தரிசனம் பெற்றனர்.