கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 26 வது கந்த சஷ்டி விழா நவ. 13ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஏழு நாட்கள் மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனையும், நெல்லை உமையொருபாக ஆதினம் உமா மகேஸ்வர சிவாச்சாரியாரின் சமய சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. நிறைவு நாளான நேற்று சுந்தரவேலவருக்கு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலகலமாக நடந்தது. சீர்வரிசை வழங்கி, மெட்டி அணிவித்து, தாலி கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை உமா மகேஸ்வர சிவாச்சாரியார், ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுதல், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.