உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2023 03:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற வேண்டி கார்த்திகை மாத சீர் வைத்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை; கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் மதியம் 2 மணி அளவில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. மேலும், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி நாடு முழுவதும் பல்வேறு கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் உள்ள ஸ்ரீ ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு கார்த்திகை மாத சீர் வைத்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.