மயிலாடுதுறை வலம்புரி விநாயகர், முருக பெருமான் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2023 03:11
சீர்காழி அருகே இன்று நடைபெற்ற வலம்புரி விநாயகர் மற்றும் முருக பெருமான் கோவில்களின் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆலாலசுந்தரம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த முருக பெருமான் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் திருப்பணிகள் செய்யப்பட்டு அருகிலேயே வலம்புரி விநாயகருக்கு தனி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு 4ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து. பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன. மங்கள வாத்தியங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மௌன மடம் சுவாமிகள் முன்னிலையில் 10 மணிக்கு கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு விநாயகர் மற்றும் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து முருக பெருமானுக்கும், விநாயகருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை சர்வ சாதகம் ஆச்சாள்புரம் சம்பந்த சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் கபாலீஸ்வரர் சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர் கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை நல்லூர் வி.என்.பி குடும்பத்தார் பெரும் பொருட்ச அளவில் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.