திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த மணம்பூண்டி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரகண்டநல்லூர் அடுத்த மணம்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையால் புனரமைக்கப்பட்டு, நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், வேத பாராயணம், விசேஷ திரவிய ஹோமம், மஹாபூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மூல கலசம் மற்றும் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் கலந்து கொண்டனர்.