பெண்கள் வடம் பிடித்த அம்மன் தேர்.. சிறுவர்கள் இழுத்து சென்ற சண்டிகேஸ்வரர் தேர்..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2023 05:11
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, ஏழாம் நாளில் பராசக்தி அம்மன் தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்க, தேர் நிலையை வந்து அடைந்தது. திருவிழாவில் சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர்கள் மட்டும் இழுத்து வந்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் வாகன மூலம் வரும் பொருட்களை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதித்தனர்.