அண்ணாமலைக்கு அரோகரா.. மலை ஏறியது ராட்சத கொப்பரை.. நாளை 2668 அடி உயர உச்சியில் மகாதீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2023 09:11
திருவண்ணாமலை ; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை மகா தீபம் 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதையொட்டி, இன்று அதிகாலை கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் ராட்சத கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அண்ணாமலைக்கு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.