பழநி: பழநி, பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், வருடாபிஷேக பூஜை நடைபெற்றது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் பெரும் தேவி தாயார், ஆண்டாள் நாச்சியார் சன்னதிகள் உள்ளன. கருடாழ்வார், வீர ஆஞ்சநேயர், கிருஷ்ணர் சன்னதிகள் உள்ளன. கோயிலில் வருடாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடந்தது. கும்ப கலசங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலச புனித நீரில் அகோபில வரதராஜ பெருமாள் கருடாழ்வார், வீர ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடைபெற்றது. பூஜைக்கு பின் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.