துளசி-நெல்லி திருக்கல்யாணம்; பெண்கள் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2023 09:11
அவிநாசி: அவிநாசி குருக்ருபா அறக்கட்டளை சார்பில், மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பைய சுவாமி திருமடத்தில் உத்தான துவாதசியை முன்னிட்டு ஸ்ரீ துளசி திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் துவாதசி திதியன்று துளசி திருக்கல்யாணம் நெல்லி மரத்துடன் நடைபெற்றது. இதில், துளசி பெண் வடிவமாகவும், நெல்லி மரம் ஆண் வடிவில் மஹாவிஷ்ணுவாகவும் போற்றி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.