காமாட்சியம்மன் சன்னதிக்கு இடப்புறம் அரூபலட்சுமி சந்நிதி உள்ளது. விஷ்ணுவின் சாபத்தால் அரூபமாக மாறிய லட்சுமி காமாட்சியை வழிபட்டு தன் சுயவடிவம் பெற்றாள். பக்தர்கள் காமாட்சி சந்நிதியில் தரும் குங்குமத்தை அரூபலட்சுமி மீது பூசி வழிபடுகிறார்கள். சந்நிதியின் வலப்புற சுவரில் கள்வப்பெருமாள் இருக்கிறார். காமாட்சி அருளால் லட்சுமி மீண்டும் அழகு பெற்றதைக் காண வந்த விஷ்ணு ஒளிந்திருந்து பார்த்தார். அவரே கள்வர் பெருமாளாக இங்கு வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் சாபம் நீங்கப் பெற்ற சவுந்தர்யலட்சுமி சந்நிதி இருக்கிறது. திருமங்கையாழ்வார் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். அம்பாள்கோயிலுக்குள் அமைந்த திவ்யதேசம் இது.