சுப்பிரமணிய சுவாமிக்கு 5 வித அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2023 11:11
வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. வள்ளி, தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், பன்னீர், இளநீர் உள்பட 5 வித அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரம், திருமஞ்சனம் வழிபாடுகளை தொடர்ந்து மகா தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அய்யலுார் பேசும்பழனியாண்டவர், தென்னம்பட்டி சவடம்மன், பாலமுருகன் என பல கோயில்களிலும் கார்த்திகை தீப விழா நடந்தது.